பாஜக மும்பை தெற்குப் பிரிவு தலைவராக தமிழர் முருகன் நியமனம்.
BY NEWS TODAY
20 Mar 2026
0
பகிர்

பாஜக மும்பை தெற்குப் பிரிவு தலைவராக தமிழர் முருகன் நியமனம்.

 மும்பை தமிழர்களுக்கும் அரசுக்கும் பாலமாக செயல்பட்டவர்


மும்பை பாஜகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் சமீபத்தில் நடைபெற்றது.

 பாஜக மும்பை தெற்குப் பிரிவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மும்பையில் வாழும் தொழிலதிபர் முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மும்பை பாஜக தலைவர் அமித் சதாம் (Amit Satam) அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பைப் பெற்ற பிறகு, அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஆஷிஷ் ஷேலார் (Ashish Shelar) மற்றும் மும்பை தலைவர் அமித் சதாம் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

 இவர் நீண்ட காலமாக மும்பையில் வசிக்கும் தமிழர்களுக்காகவும், அங்குள்ள பாஜகவின் வளர்ச்சிப்பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். குறிப்பாக மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளுக்கும் பாஜக தலைமைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறார். மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், மும்பை பாஜகவின் முக்கியத் தலைவருமான ஆஷிஷ் ஷேலார் (Ashish Shelar) மற்றும் மும்பை பாஜக தலைவர் அமித் சதாம் (Amit Satam) ஆகியோருடன் நெருக்கமான அரசியல் தொடர்பில் இருப்பவர்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்