டாக்டர் ராமதாஸ், சசிகலா  கூட்டணி கையெழுத்தானது
BY NEWS TODAY
20 Mar 2026
0
பகிர்

தமிழகத்தில் 5 முனைப் போட்டி 


டாக்டர் ராமதாஸ், சசிகலா 

கூட்டணி கையெழுத்தானது


 டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து வரும் தேர்தலில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

எங்கள் கொள்கையில் உறுதியோடு உள்ள மற்ற கட்சிகள் கூட்டணியில் சேரலாம் என்று டாக்டர் ராமதாஸ், சசிகலா இருவரும் கூட்டாக பேட்டி கொடுத்துள்ளனர். 

 தைலாபுரம் தோட்டத்தில் இன்று ராமதாசை சந்தித்த சசிகலா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். கூட்டணி பேச்சு நல்லபடியாக முடிந்ததால் அங்கு விருந்தும் நடைபெற்றது. 

இதன்மூலம் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டியானது இப்போது 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது.

வடக்கே வன்னியர், தெற்கே தேவர் என்ற முழக்கத்தோடு டாக்டர் ராமதாஸ், சசிகலா அணி களமிறங்கப் போவதாக சமூக ஊடகங்களில் அவர்களது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்