வளம் கொழிக்கும் துறைகளை பெற்றது தமிழகத்தை அடமானம் வைத்துதான்
BY NEWS TODAY
21 Mar 2026
0
பகிர்

 வளம் கொழிக்கும் துறைகளை பெற்றது தமிழகத்தை அடமானம் வைத்துதான் 


தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவாரா ஸ்டாலின்- டாக்டர் பா.சரவணன் 


திமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தங்கள் சுயநலத்திற்காக கட்சத் தீவு, காவிரி, முல்லைபெரியார் ஆகிய ஜீவாதார பிரச்சனைகளை அடமானம் வைத்தது குறித்து ஸ்டாலின் அவரது தொண்டர்களுக்கு கடிதம் எழுத முடியுமா?

ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு ஒரு எழுதிய கடிதத்தில், திமுக தேர்தல் அறிக்கை மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அறிக்கையாக இருக்கும். அதிமுக சுயநலத்திற்காக சொந்த கட்சியை அடமானம் வைத்துள்ளது என்று வாய் கூசாமல் உண்மைக்கு புறம்பாக பொய்யான தகவலை கூறியுள்ளார் . பொய் பேசுவதில் ஸ்டாலின் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 525 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது அதில் 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவிலேய கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லையில் தமிழகம் முதலிடம்,சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழக முதலிடத்தில் உள்ளது இதையெல்லாம்

 மற்ற மாநிலங்களில் இல்லை தமிழகம் தான் முதன்மையாக உள்ளது என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளாரா ?

அதேபோல எடப்பாடியார் டெல்லி சென்றதை விமர்சித்து உள்ளார். 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் ஒரு சல்லிக்காசு நிதியை கூட திமுக கூட்டணி பெற முடியவில்லை என்பதை ஸ்டாலின் நினைத்துப் பார்க்க வேண்டும். 

அதேபோல கேஸ் மானியம் தட்டுப்பாடு போக்குவதற்காக சென்றாரா ?என்று கேள்வி எழுப்பியுள்ளார். கேஸ் தட்டுப்பாடு என்பது போரால் ஏற்பட்டது என்று மக்களுக்கு தெரியும். நீங்கள் கேஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினீர்கள். அதை நீங்கள் தந்தீர்களா என்று மக்கள் உங்களை திருப்பி கேட்கிறார்கள் .

தங்கள் சுயநலத்திற்காக சொந்த கட்சி அடமானம் வைத்துள்ளார்கள் என்று வாய் கூசாமல் பொய் பேசுகிறீர்கள். இதே சர்க்காரியா ஊழலுக்காக தங்களை காப்பாற்றிக்கொள்ள அன்றைக்கு தமிழகத்தில் இருந்த 

கச்ச தீவை மத்திய அரசின் நிர்பந்தத்தின் பேரில் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது யார் ?

காவிரியை புதுப்பிக்காமல் விட்டது யார் ?

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் 136 அடியில் இருந்து 142 அடியாக தேக்கிக் கொள்ளலாம், பேபி அணையை பழுதுபார்க்கப்பட்ட பின் 152 அடியாக தேக்கி கொள்ளலாம் என அம்மா உச்ச நீதிமன்றத்தில் போராடி தீர்ப்பை பெற்று தந்தார் .

கடந்த அம்மாவின் ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் ,5 முறை 142 அடியாக தேக்கப்பட்டது. திமுகவின் ஐந்தாண்டில் ஒருமுறை கூட 142 அடியாக தேக்கப்படவில்லை.

மத்திய அரசிடம் 17 வருடம் திமுக அங்கம் வகித்த போது டெல்லிக்கு அடிக்கடி சென்று வளம் கொழிக்கும் துறைகளை தான் திமுக பெற்றது தவிர,தமிழக நலனுக்காக அல்ல? 

தங்கள் நலனுக்காக ஜீவாதார பிரச்சனையை தாரைவார்த்து திமுக தான் என்பதை மக்கள் மறக்கவில்லை 

நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் டெல்லி அணியா,தமிழக அணியா என்று மக்கள் பார்க்கவில்லை எடப்பாடியார் தலைமையிலான 

தர்மர் அணியா ,ஸ்டாலின் தலைமையிலான துரியோதணன் அணியா, என்று தான் பார்க்கிறார்கள் இறுதியில் தர்மம் தான் வெல்லும் என கூறினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்