மதுரை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

 ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 23 பேர் இடம் பெற்றிருந்தனர்.

 தற்போது 127 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

 மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு,, திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பா ஆகியோர் போட்டியிடுவதாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

 தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மேலும் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

 மதுரை வடக்கு டாக்டர் சரவணன் மதுரை கிழக்கு மகேந்திரன், சோழவந்தான் மாணிக்கம், மேலூர் பெரிய புள்ளான் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் மகேந்திரன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மதுரை தெற்கு தொகுதி பிஜேபிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மத்திய தொகுதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்