எதிர்த்து போட்டியிட்டவரின் வெற்றிக்கு பாடுபட போகும் எம்பி
BY NEWS TODAY
01 Apr 2026
0
பகிர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கையை தொடர்ந்து தி.மு.க. அ.தி.மு.க.ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாத்தில் தீவிரமாக களமிறங்கி உள்ளன. விஜயின் த. வெ. க., சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் சவால் விட்டு களமாடி வருகின்றன.

 தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  தே.மு.திக.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அதில் விருதுநகர் தொகுதியும் ஒன்று. இங்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூரும், விஜய பிரபாகரனும் எதிர்த்து போட்டியிட்டவர்கள். இதில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் மாணிக்கம் தாகூரால் வெற்றி பெற முடிந்தது.

 தற்போது சட்டமன்றத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி ஆன மாணிக்கம் தாகூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தன்னை கடுமையான சவாலுக்கு தள்ளிய விஜய பிரபாகரனின் வெற்றிக்கு பிரசாரம் செய்யும் நிலைக்கு தற்போது மாணிக்கம் தாகூர் தள்ளப்பட்டுள்ளார். இந்த வினோதமான சூழ்நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்