எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை பிரதமர் திறக்கும் போது எடப்பாடியார் முதல்வராக இருப்பார்
BY NEWS TODAY
01 Apr 2026
0
பகிர்

எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை பிரதமர் திறக்கும் போது எடப்பாடியார் முதல்வராக இருப்பார்


திருமங்கலம் தொகுதியில் ஆர். பி. உதயகுமார் பிரச்சாரம்


திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி .உதயகுமார் 3வது நாளாக கள்ளிக்குடி ஒன்றிய பகுதியிலான கோபாலபுரம், செங்கப்படை, நேசனேரி, குளத்துவாய்பட்டி ,அரசபட்டி, வலையங்குளம் ,திருமால், புதுப்பட்டி, சுவாமி நல்லம்பட்டி ,கரிசகாலன்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். 

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

 பிரச்சாரத்தின் போது ஆர்.பி உதயகுமார் பேசியதாவது,

 மாணவரணி அமைப்பாளராக இருந்தபோது அம்மா மீது பொய் வழக்கு போட்டு சிறை சென்றபோது திமுகவின் பொய் வழக்கை எதிர்த்து சிறைக்கு சென்றேன். வழக்கறிஞர் பணியை மேற்கொண்ட பொழுது மாநில மாணவரணி செயலாளராக அம்மா அறிவித்தார். 2011ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றினேன். வருவாய்த் துறையில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள்,பேரிடர் மேலாண்மை துறையில் டிஜிபி அந்தஸ்து உள்ள அதிகாரிகள்,தீயணைப்பு அதிகாரிகள் ஆகியோரிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது 

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக பணியாற்றியுள்ளேன். மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன் தற்போது நான்காவது முறையாக சட்டமன்ற தேர்தலில் நிற்கின்றேன் எனக்கு இருக்கும் அனுபவங்களை வைத்து தொகுதியின் முன்னேற்றத்திற்கு நான் நிச்சயம் பாடுபடுவேன். 

கடந்த முறை நீங்கள் கொடுத்த அதிகாரத்தை வைத்து தான் எய்ம்ஸ் மருத்துவமனையை போராடி இந்த தொகுதிக்கு பெற்றுக் கொடுத்தேன். தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. எடப்பாடியார் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக வருவார். அப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு பாரதப் பிரதமரை அழைத்து வருவார். மதுரையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலங்கள் எடப்பாடியாரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

திருமங்கலம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன். திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழி சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. நில எடுப்பு பணிகளுக்கு எந்த இடங்களிலும் இடிக்காமல் புறவழிச் சாலையின் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. 

தற்போது மத்திய அரசின் நகாய் திட்டத்தின் மூலம் சிவரக்கோட்டை, கள்ளிக்குடி அருகே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை எடப்பாடியார் செய்து கொடுத்துள்ளார்.

சிலர் தேர்தலுக்காக உங்களை பார்க்க வருவார்கள். நான் அப்படியல்ல எப்போதும் உங்களுடன் இருப்பவன். எனக்கு தாய் தந்தையர் கிடையாது எனக்கு நீங்கள் தான் தாய் தந்தையர் .

உயிர் வேண்டுமா? நம்பிக்கை வேண்டுமா? எதற்கு முன்னுரிமை என்று கேட்டால் நான் உயிரை விட நம்பிக்கைதான் முக்கியம் என்று கூறுவேன் .

 எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் அப்போது திருமங்கலம் முதல் மதுரை வரை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். திருமங்கலம் தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக நிச்சயம் மாற்றி காட்டுவேன். திருமங்கலம் தொகுதி வளர்ச்சி பெற மூன்றாவது முறையாக இரட்டை இலையை மக்கள் மலர செய்ய வேண்டும் என பேசினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்