வளர்ச்சிதிட்ட பணிகளுக்காக 500 மில்லியன் டாலர் ஒதுக்கீடு
BY NEWS TODAY
02 Apr 2026
0
பகிர்

500 மில்லியன் டாலர் பல்வேறு நாடுகளின் வளர்ச்சிதிட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு 

 

ரோட்டரி அகில உலக தலைவர் இங்கா பாபலோலா மதுரையில் பேட்டி


பல்வேறு நாடுகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 500 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரோட்டரி இயக்க 26- 27 ஆம் ஆண்டுக்கான அகில உலகத் தலைவர் இன்கா பாபிலோலா மதுரையில் தெரிவித்தார்.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகில் உள்ள ஜி ஆர் டி ஹோட்டலில் ரோட்டரி இயக்கத்தின் 26- 27 ஆம் ஆண்டிற்கான அகில உலக தலைவர் இங்கா பாபலோலா, ரோட்டரி பன்னாட்டு இயக்குனரும் அடுத்தாண்டு ரோட்டரி அகில உலக துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.முருகானந்தம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் தான் சேருகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினரும் அதிக அளவில் இந்தியாவில் தான் ரோட்டரி உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் ரோட்டரி வளர்ச்சி அடைந்து வருகிறது. போலியோ இல்லா இந்தியாவை உருவாக்கியதில் ரோட்டரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் போலியோ இருப்பது தெரியவந்துள்ளது. அது மீண்டும் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காகவும் கண்காணிக்கவும் ரோட்டரி மிக முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. 

மேற்கு ஆசிய நாடுகள் போரினால் பதட்டமான சூழல் உருவாகி வரக்கூடிய நிலையில அங்கு அமைதியை ஏற்படுத்துவது ரோட்டரி சங்கத்தின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ரோட்டரி சார்பில் அமைதி நிலவுவதற்காக அமைதி மையம் என்னும் ஒரு அமைப்பை தொடங்கியுள்ளது. அமைதி ஏற்படுத்த உலக அமைதி மையம் என்னும் எட்டு மையங்களை உருவாக்கி உள்ளது. அதில் இந்தியாவின் புனே சிட்டியில் சிம்பியாசிஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு சென்டரை உருவாக்கி உள்ளது.

இந்த அமைதிக்கான மையம் அமைதியை ஏற்படுத்த பல்வேறு பணிகளை செய்து வருகிறது என்றார்.

அகில உலக ரோட்டரி பல்வேறு நாடுகளின் பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகளுக்காக 500 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது. அதோடு அந்த நாடுகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இந்திய நாட்டில் கல்விக்கும் மற்றும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ரோட்டரி, உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்முயற்சிக்கு 1979ல் இருந்து போலியோ நோயாளிகளை 99.9 சதவிகிதம் குறைத்துள்ளது.

 2030ம் ஆண்டு சர்வதேச ரோட்டரி அமைப்பின் 125வது ஆண்டாக அனுசரிக்கப்படவுள்ள நிலையில், உலகளவில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1.25 மில்லியன் ஆகவும், ரோட்ராக்டர்கள் என்றழைக்கப்படும் 18 வயது முதல் 30 வயது வரையுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1,25,000 ஆக உயர்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மண்டல மாநாடு புதிய உறுப்பினர்களை ரோட்டரியில் இணைத்தும் புதிய ரோட்டரி சங்கங்களை துவங்கியும் ரோட்டரியின் சேவைகளை மேலும் பலப்படுத்த வழி வகுக்கும். 

மண்டல உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் குமணன் தலைவராகவும், மண்டல உறுப்பினர் துணை ஒருங்கிணைப்பாளர் ஆனந்த ஜோதி, மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரோட்டரி மாவட்ட 3000 சார்பில் ஆளுநர் கார்த்திக் முன்னிலையில் வளர் இளம் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஊசி அகில உலகத் தலைவர் இன்கா பாபிலோலா தலைமையில் போடப்பட்டது. இதில் ரோட்டரி மாவட்டத்தின் வருங்கால ஆளுநர்கள் ஆர் பி எஸ் மணியன் புதுக்கோட்டை, லியோ பெலிக்ஸ், மீனா சுப்பையா மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ரோட்டரி ஆளுநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 12 முதல் 16 வயதுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள், ரொட்டேரியன்கள், ரோட்டரி தலைவர்கள், மாவட்டத்தின் முன்னாள், இந்நாள், வருங்கால தலைவர்கள் ஆகியோர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். 

ஏற்பாடுகளை பன்னாட்டு இயக்குனர் மற்றும். 2026 27 ஆம் ஆண்டுக்கான அகில உலகத் தலைவர் எம்.முருகானந்தம் செய்திருந்தார்


*****

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்