மதுரை வடக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும் திமுக தோற்கும
BY NEWS TODAY
02 Apr 2026
0
பகிர்

மதுரை வடக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும் திமுக தோல்வியை தழுவும

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு


மதுரை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சிறப்புரை ஆற்றினார்.

அவர் கூறியதாவது,  

மதுரை வடக்கு தொகுதியில் 266 பூத்துகள் உள்ளது. இதில் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மதுரையில் 10 தொகுதியில் நாம் அமோக வெற்றி பெறுவோம். குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் இரட்டை இலை வெற்றி பெறும். திமுக தோல்வி தரும் என பேசினார்

 வடக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணன்,மதுரை வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர், வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் கே.பி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் ,மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவை சேர்ந்த மாரி சக்கரவர்த்தி ,அமமுகவை சேர்ந்த செல்லப்பாண்டி, பாமக வை சேர்ந்த எஸ் கே தேவர் ,மூமூக பகவதி, தாமாக நடராஜன், மருது சேனை மதுரை புறநகர் கிருஷ்ணன், புரட்சி பாரதம் முருகேசன் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.




----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்