சுந்தர் சியை நிறுத்தியதால் திமுக வேட்பாளர் பிடிஆர் வெற்றி எளிதாகி விட்டது
BY NEWS TODAY
02 Apr 2026
0
பகிர்

 சுந்தர் சியை நிறுத்தியதால் திமுக வேட்பாளர் பிடிஆர் வெற்றி எளிதாகி விட்டது 


மதுரையில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வேதனை பேட்டி 




 மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியில் உள்ளபுதிய நீதி கட்சியின் சார்பில் சினிமா இயக்குனர் சுந்தர் சி இரட்டை இலையில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து மதுரை வந்த அவர் நேற்று மாலை முதல் மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

 இந்நிலையில் மதுரைக்கு சம்பந்தமில்லாத சினிமா இயக்குனர் சுந்தர் சியை வேட்பாளராக அறிவித்ததன் மூலம் திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் பி டி ஆர் பழனி விழா தியாகராஜனின் வெற்றி உறுதியாகி உள்ளது என்று

 மதுரை மத்திய தொகுதி பாஜக மண்டல் உறுப்பினரும் முன்னாள் அதிமுக கவுன்சிலருமான லட்சுமி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 மேலும் அவர் கூறுகையில், 


 

 மத்திய தொகுதியில் மதுரையில் மைந்தனாக இருக்கக்கூடியவர் தான் போட்டியிட வேண்டும். மதுரை மத்திய தொகுதியில் எவர் ஒருவர் வெற்றி பெறுகிறாரோ அந்தக் கட்சி குறிப்பாக தமிழக அளவில் ஆட்சியைப் பிடிக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

சமீபத்தில் அதிமுகவில் இணைந்த திமுகவைச் சேர்ந்த எஸ்ஸார் கோபி, மன்னன் உள்ளிட்டவர்களுடைய நிலையை பார்த்து எங்கே அவர்கள் தொகுதியை கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் மயிலாப்பூர் தொகுதியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் 

மதுரைக்கு சம்பந்தமில்லாத இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி யை இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக அறிவித்திருப்பது திமுக அமைச்சருக்கான வெற்றியை இலகு ஆகிவிட்டது என்பது போல தான் தோன்றுகிறது. 


 தான் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோமா என்ற எண்ணத்தில் இருந்த திமுக அமைச்சருக்கு தற்போது எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்கிற நிலையை உருவாக்கி விட்டார்கள். 

சுந்தர் சி ஒரு நல்ல நடிகர் தயாரிப்பாளர். அவர் மீது நாங்கள் குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் அவரை வேட்பாளராக நியமித்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது 

 கூட்டணி கட்சியைச் சேர்ந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. 


 கட்சித் தலைமைக்கு இதை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சுந்தர் சி வேட்பாளராக நிற்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை மக்கள் எளிதில் அணுக கூடியவராக மக்களுக்கான பிரச்சனையையும் மக்களுடைய வாழ்வியல் நிலையையும் தெரிந்து கொண்டவர் தான் மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்