அரசியல் களத்திற்கு வந்த ஸ்டாலின் மருமகன் சபரீசன்
BY NEWS TODAY
03 Apr 2026
0
பகிர்

 அரசியல் களத்திற்கு வந்த ஸ்டாலின் மருமகன் சபரீசன் 


இபிஎஸ் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில்



தமிழ்நாட்டில் 4 அதிகார மையங்கள் செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் துணை முதல்வர் உதயநிதி, முதல்வரின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோர் அதிகார மையங்களாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.


இந்நிலையில், அவரது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் முதல்வரின் மருமகன் சபரீசன் அரசியல் களத்திற்கு நேரடியாக வந்துள்ளார். இதுவரை இலை மறை காயாக பின்னணியில் இருந்து இயக்கி வந்த சபரீசன் நேரடியாக களத்திற்கு வந்துள்ளார். சென்னையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக வில்லிவாக்கம் நலச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சபரீசன் பங்கேற்றார்.


பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "நாங்கள் மிகச்சிறந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். புதிய கட்சியால் (தவெக) எவ்வித பாதிப்பும் இல்லை. நாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் மீண்டும் 100% வெற்றியை அளிக்கும். எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் வெற்றியை உறுதி செய்யும்" என்று நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து கூறினார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்