மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர் கார்த்திகேயன்
BY NEWS TODAY
04 Apr 2026
0
பகிர்

மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர் கார்த்திகேயன்.

 மதுரை கிழக்குத் தொகுதியில் 


 தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் இன்று வேட்பாளர் தாக்கல் செய்தனர்.

 மதுரை கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் மூர்த்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். 

 அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஒத்தக்கடையில் உள்ள தாலுகா அலுவலகம் வந்தார்.

 ஒத்தக்கடை சந்திப்பில் இருந்து தொண்டர்களுடன் படை சூழ ஊர்வலமாக வந்த அவர் பின்னர் விநாயகர் கோவிலில் இருந்து மாட்டு வண்டியில் ஏறி வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பினார். 

 பாதுகாப்பு போலீசார் மாட்டுவண்டி வருவதை கண்டு வெளியே தடுத்து நிறுத்தினர். அப்போது வேட்பாளர் தான் மாட்டு வண்டியில் வருகிறார் என்பதை அறிந்து அனுமதித்தனர். பின்னர் அவர் கிழக்கு தாசில்தாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்