அதிர்வலையை ஏற்படுத்திய கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

அதிர்வலையை ஏற்படுத்திய கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா

 திமுக அதிமுக வேட்பாளர்கள் கலக்கம் 


தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் களம் தற்போது பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் பி.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா, தற்போதைய கள நிலவரப்படி மற்ற இரு திராவிடக் கட்சி வேட்பாளர்களை முந்தி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

​ஜெகன்நாத் மிஸ்ரா ஏற்கனவே 2006-ம் ஆண்டு தேமுதிக சார்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு 12, 360 (10.5 சதவீதம்) வாக்குகளைப் பெற்ற அனுபவம் கொண்டவர். தற்போது நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவராக இருந்து, தவெகவுடன் இணைந்து போட்டியிடுவது அவருக்குப் பலமாகப் பார்க்கப்படுகிறது.

 மேலும் இவர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இப்பகுதி மக்களுக்காக செய்த சமூக சேவைகள், நலத்திட்ட உதவிகள் இவருக்கு மேலும் ஆதரவை பெருக்கி உள்ளது. 

​ தொகுதியின் ஒவ்வொரு கிராமம் மற்றும் வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்திப்பதில் அவர் காட்டும் வேகம், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் பொதுமக்களிடையே அவருக்குப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை அவர் முன்னெடுப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கம்பம் ஒரு முக்கிய வணிக மையமாகும். இங்குள்ள வர்த்தகர்களை நேரில் சந்தித்து, அவர்களது பிரச்சனைகளை கேட்டு அறிந்து தீர்த்து வைக்க உறுதி அளிப்பது மேலும் பலத்தை கூட்டி உள்ளது.


​தற்போதைய நிலவரப்படி கம்பம் தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளது.

​ஜெகன்நாத் மிஸ்ரா முந்திச் செல்வதாகக் கருதப்படும் முக்கியக் காரணங்கள் ஆடம்பரமான பிரச்சாரங்களை விட, தெருமுனை சந்திப்புகள் மற்றும் தனிநபர் சந்திப்புகளுக்கு அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்.

 விவசாயிகளுக்கான நீர் பாசனத் திட்டங்கள் மற்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் மேம்பாட்டிற்கான அவரது தெளிவான திட்டங்கள் ஆகும்.

​பல ஆண்டுகளாக மாறி மாறி வாக்களித்த மக்களுக்கு, ஒரு வலுவான மாற்று வேட்பாளராக இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

​தற்போதைய கள நிலவரப்படி, திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட கம்பத்தில் ஜெகன்நாத் மிஸ்ரா ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் என்பது நிதர்சனம். இந்த வேகம் தொடரும் பட்சத்தில், தேர்தல் முடிவுகளில் அவர் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார் என மக்கள் கருதுகின்றனர்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்