கரூர் திமுக வேட்பாளர் ராஜினாமா!
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்


கரூர் திமுக வேட்பாளர் ராஜினாமா!!


  கரூர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தியாகராஜன் கரூர் தாந்தோணி மலை வெங்கட்ரமண சாமி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் மற்றும் தலைவர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டிருந்தார். 

 இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி அறங்காவலர்களாக இருப்பவர்கள் எந்த விதமான கட்சியை சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது. திமுக சார்பில் போட்டியிடுவதன் மூலம் தியாகராஜன் தன்னை திமுக கட்சியை சார்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் . ஆகவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை செயலர் ஆணையர் ஆகியோருக்கு இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் புகார் அளித்திருந்தார். 

 அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் போது, “நீங்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா?” என்ற கேள்விக்கு உண்மையான பதில் அளிக்க வேண்டும். தியாகராஜன் உண்மையில் அரசியல் சார்பு கொண்டவர் என்பதால், “ஆம்” என்று பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் தவறான தகவல் அளித்து “இல்லை” என்று கூறியிருப்பதன் மூலம் நியமனம் பெற்றிருக்கிறார்.

இது தவறான வாக்குறுதி (misrepresentation) மற்றும் அதன் பேரில் செய்யப்பட்ட சட்ட விரோத நியமனம் ஆகும்.

எனவே மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை கருத்தில் கொண்டு, தியாகராஜன் அவர்களை அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும், தலைவர் பதவியிலிருந்தும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தனது புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

 இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பை 

 ராஜினாமா செய்திருப்பதாக திருக்கோயில் செயல் அலுவலர் பதில் அனுப்பி இருக்கிறார்.

 இது குறித்து ராம ரவிக்குமார் கூறுகையில், 

 தமிழ்நாட்டு திருக்கோவில்களில் அறங்காவலர் குழுவில் உறுப்பினர் மற்றும் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியும் சார்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்று சட்ட விதி இருந்தாலும் நீதிமன்றம் செல்லும் முன்பாக கரூர் திமுக வேட்பாளர் ராஜினாமா செய்து இருப்பது வரவேற்பு கூறியதாக இருந்தாலும் இவரை அறங்காவலர் குழுவில் நியமனம் செய்வதற்கு முன்பு எந்த அரசியல் கட்சியும் சார்ந்தவர் இல்லை என்று சான்று வழங்கிய இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இது குறித்து நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் இருந்தால் செல்வோம்.


 மேலும் கரூர் திமுக வேட்பாளராக தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த வேட்பு மனு தேர்தல் ஆணையம் இணையத்தில் ஏற்றப்படாமலும்,

 மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட V.செந்தில் பாலாஜியின் சகோதரர் 

வி அசோக் குமார் என்பவர் தாக்கல் செய்த விபரம் தேர்தல் ஆணையம் இணையத்தில் ஏற்றப்பட்டு இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


ஒருவேளை தியாகராசன் மனு நிராகரிக்கப்பட்டு செந்தில் பாலாஜியின் சகோதரர் பி அசோக் குமார் மனு ஏற்றுக் கொள்ளக்கூடிய தந்திரத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருப்பாரோ என்ற சந்தேகம் தொகுதி மக்களிடம் எழுகிறது என்று அவர் கூறினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்