குடும்பத்தை விட தொகுதி மக்களை அதிகம் நேசிப்பவர் என் தந்தை
BY NEWS TODAY
07 Apr 2026
0
பகிர்

குடும்பத்தை விட தொகுதி மக்களை அதிகம் நேசிப்பவர் என் தந்தை 

திருமங்கலம் தொகுதியில் தந்தைக்காக மகள் பிரச்சாரம்


திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அவருடன் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் செயலாளரும், வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் மகள் யு. பிரியதர்ஷினி முரளி , ஒன்றியச் செயலாளர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் திருப்பதி ,பொதுக்குழு உறுப்பினர் பாவாடியான், மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், வக்கீல் பாஸ்கரன், பேரையூர் ராமகிருஷ்ணன், மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆர் பி உதயகுமார் மகள் பிரியதர்ஷினிமுரளி தனது தந்தைக்காக மக்களிடம் வாக்கு கேட்டு பேசியதாவது, 


 24 மணி நேரமும் திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எனது தந்தை உழைத்து வருகிறார். தனிப்பட்ட ஆசை அவருக்கு கிடையாது. தன் குடும்பத்தை காட்டிலும் திருமங்கலம் தொகுதி மக்களை தான் அதிகமாக நேசித்து வருகிறார் .


கொடுத்த தேர்தல் வாக்குறுதியை தனது உயிரை கொடுத்தாவது நிச்சயம் நிறைவேற்றுவார். என்றைக்குமே அவர் சுயநலத்துடன் உழைத்தது இல்லை மக்களுக்காகத்தான் உழைத்து வருகிறார். கொரோனா காலங்களில் உங்களுக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகளை வழங்கினார். அதே போல கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டது.


பெண்களுக்கான பாதுகாப்பான ஆட்சி எடப்பாடியார் ஆட்சியாகும். குறிப்பாக இன்றைக்கு 292தேர்தல் வாக்குறுதியை எடப்பாடியார் அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு அதிகமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

 திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வினால் மக்கள் படும் இன்னல்களை போக்க அனைத்து குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


அதே போல பெண்களுக்கு குளிர்சாதன பெட்டி, குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2,000 ரூபாய் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் 100 நாட்களை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

உங்கள் ஆதரவுடன், உங்கள் நல்லாசியுடன் நான்காம் முறையாக எனது தந்தை வெற்றி பெறுவார் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் உங்களுக்கு நிச்சயம் வழங்குவார். என்றைக்கும் திருமங்கலம் தொகுதிக்கு காவல்காரனாக இருப்பார் என பேசினார்.

 அவரது பேச்சை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.



ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது 


இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எடை போட்டு பார்த்தால் கல்வி, மக்கள் பணி, சேவை, நாணயம் ஆகியவற்றில் நான் தான் உங்கள் மனதில் முதலிடத்தில் இருப்பேன் 



பெரும்பிடுகு முத்திரையருக்கு தபால் தலை வெளியிட்டு அவருக்கு புகழ் சேர்த்தது தேசிய ஜனநாயக கூட்டணியாகும். இது போன்ற நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த தலைவர்கள் ,தியாகிகளை எல்லாம் கௌரவ படுத்துவது தேசிய ஜனநாயக கூட்டணியாகும். 




கொரோனா காலங்களில் உங்களுடன் நான் இருந்தேன் இன்றைக்கு என்னை விமர்சனம் செய்பவர்கள் அன்னைக்கு கொரோனா காலங்களில் வீட்டை விட்டு கூட வெளியே வரவில்லை. அதேபோல இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஏழு ஊர் திருவிழா கொரோனா காலங்களில் தடைபடக்கூடாது என்று அப்போது நான் அமைச்சராக இருக்கும் பொழுது உங்கள் கோரிக்கையை

நிறைவேற்றி நான் நடத்தி காட்டினேன். 



ஏப்ரல் 23ஆம் தேதி தீர்ப்பு எழுதும் நாள் அந்த நாளில் உங்கள் வாக்குகள் அனைத்தும் இரட்டை இலைக்கு வாக்களித்து, மே நான்காம் தேதி வெற்றி என்ற பரிசை வழங்குமாறு பாதம் அணிந்து கேட்டுக்கொள்கிறேன் என பேசினார் .

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்