சூடு பிடிக்கும் கம்பம் சட்டமன்றத் தொகுதி" "மாற்றத்தை விரும்பும் மக்களின்" வாக்குகள் தவெக பக்கம்"
BY NEWS TODAY
07 Apr 2026
0
பகிர்

சூடு பிடிக்கும் கம்பம் சட்டமன்றத் தொகுதி" 

"மாற்றத்தை விரும்பும் மக்களின்" வாக்குகள் தவெக பக்கம்" 


தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா தீவிர வாக்கு வேட்டை.  

-------------------------------------

தேனி:ஏப்:07


கடந்த மார்ச் 29-ம் தேதி சென்னையில் தலைவர் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்கள் பட்டியலில், கம்பம் தொகுதிக்கான நம்பிக்கைக்குரிய வேட்பாளராக ஜெகநாத் மிஸ்ரா களம் இறக்கப்பட்டார். 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், **தமிழக வெற்றிக் கழகம் (TVK)** சார்பில் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் வேட்பாளர் **PLA. ஜெகநாத் மிஸ்ரா** மக்களிடையே கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

தேனி மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான கம்பத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக **PLA. ஜெகநாத் மிஸ்ரா** தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நீண்ட கால அரசியல் அனுபவமும், மக்கள் மத்தியில் நேரடித் தொடர்பும் கொண்ட இவர், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம் **கம்பம்** தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு, 12,360 வாக்குகள் பெற்றவர் (10.5 சதவீதம்).

2026 தவெக-வின் முதல் தேர்தலிலேயே கம்பம் தொகுதியில் மிகப்பெரிய அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தி வருகிறார். கம்பம் சட்டமன்றத் தொகுதியில் ஜெகநாத் மிஸ்ராவின், மக்களிடையே வலம் வரும் நேரடி பரப்புரை ஸ்டைல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முறை" (Door-to-Door Campaign) மூலம் அடித்தட்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார், தவெக-வின் வரவு கம்பம் தொகுதியில் இளைஞர்களிடையே ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.

தவெக தொண்டர்களின் தீவிர பிரச்சாரத்தின் மூலமாக தவெக-வின் 'விசில்' சின்னம் தொகுதி முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. மேலும் "ரூபாய் 2,000, 5,000 கொடுத்தாலும் மக்களின் வாக்குகள் விசில் சின்னத்திற்குத்தான்" என அவர் மேடைகளில் முழங்கி வருவது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

திராவிட கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் கம்பத்தில், தவெக வேட்பாளர் PLA. ஜெகநாத் மிஸ்ரா-வின் வருகை "மாற்றத்தை விரும்பும் மக்களின்" வாக்குகளை தவெக பக்கம் திருப்பியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு இணையாக அவர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம், வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் செல்வாக்கு பெருகும் தவெக - கம்பம் தொகுதியில் வெற்றிக் கனியைப் பறிக்குமா? என்பதை மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் சொல்லும்!

   -மு.பழனிவேல்ராஜன்-தேனி

----------------------------------------

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்