காரில் சேஸ் செய்து மோதி பைக்கில் சென்ற இருவர் வெட்டிக்கொலை
BY NEWS TODAY
07 Apr 2026
0
பகிர்

 காரில் சேஸ் செய்து மோதி பைக்கில் சென்ற இருவர் வெட்டிக்கொலை 


 சினிமா பாணியில் மதுரையில் பயங்கரம்



 மதுரை ஒத்தக்கடை அருகே தேத்தாம்பட்டியை சேர்ந்த முனியசாமி என்ற கடுகு என்பவர் தனது பைக்கில் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் டாடா நெக்ஸான் காரில் வந்த மூன்று பேர் அவர்களை துரத்திச் சென்று பெரியார் பாசன வாய்க்காலில் முட்டி மோதி கீழே தள்ளினர். கீழே விழுந்த பைக்கில் இருந்த இருவரையும் தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு கும்பல் தப்பி ஓடியது. இந்த சம்பவத்தில் துரத்திச் சென்ற காரும், கொலையானவர்கள் ஓட்டிச் சென்ற பைக்கும் ஆற்றுக்குள் விழுந்தது. 

 காரில் மூன்று பேர் இருந்ததாக தெரிய வருகிறது. இரட்டை கொலை குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த இருவரும் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்