16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
விலை உயர்வு போல கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்களும் உயர்ந்து விட்டது
BY NEWS TODAY
12 Apr 2026
0
பகிர்

விலை உயர்வு போல கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்களும் உயர்ந்து விட்டது


திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர். பி. உதயகுமார் பிரச்சாரம்


திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். அவருடன் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி முரளி, ஒன்றியசெயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாவாடியான், மற்றும் வக்கீல்கள் திருப்பதி, பாஸ்கரன், உட்பட பலர் பங்கேற்றனர். 

ஆர் பி உதயகுமார் பேசியதாவது,

 நான் அமைச்சராக இருந்த போது 40 கோடி சிறப்பு நிதியை கொண்டு வந்து கல்லுப்பட்டி பேரூராட்சியில் திட்டங்களை செய்துள்ளேன். 

 திருமங்கலம் முதல் கொல்லம் வரை உள்ள நான்கு வழிச்சாலை ஒரு வீடு கூட இடிக்கப்படாமல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எனக்கு வழங்கிய வாய்ப்பினால் தான் இதையெல்லாம் செய்ய முடிந்தது.

நடைபெறும் தேர்தலில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் என்னை நீங்கள் வெற்றி பெறவைத்து முதலிடத்தில் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கப்படும் அந்த பாக்கியத்தை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. மறுபுறம் சட்ட ஒழுங்கு சீர்கேட்டு கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த 5 ஆண்டுகளில் 6,750 கொலைகள் நடந்துள்ளன. அதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இதுவரை 40,000 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என கூறினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்