16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சுந்தர்சி-க்கு அளிக்கும் வாக்கு ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்
BY NEWS TODAY
14 Apr 2026
0
பகிர்

 சுந்தர்சி-க்கு அளிக்கும் வாக்கு ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு 


 மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 58 வது வார்டு பகுதியில் கவுன்சிலர், திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது,

 " நான் விகாசா (Vikasa) பள்ளியில் படித்தவன். அந்த நேரத்தில் திராவிடன் உணவகத்தில் ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் உட்கார்ந்து பரோட்டா சாப்பிடுவேன். நான் படித்த பள்ளி இருக்கும் தொகுதியிலேயே வேட்பாளராக வரும் வாய்ப்பை அளித்தவர் கலைஞர். 2021-ல் சட்டமன்ற உறுப்பினராகி, இந்த முறை அமைச்சராகவும் பொறுப்பேற்றேன்.


நமது தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளைச் செய்துள்ளோம்.  

 எதிரணி வேட்பாளருக்கு அரசியல் கொள்கையோ, தத்துவமோ கிடையாது. 58 வயதாகிறது, 40 கோடி சொத்து இருக்கிறது, ஆனால் ஒரு பைசா கூட மக்களுக்கு உதவியதில்லை. தொகுதி எல்லை கூடத் தெரியாத அவரை இங்கே இறக்குமதி செய்திருக்கிறார்கள். அதிமுகவின் சின்னத்தை வாடகைக்கு எடுத்துள்ள அந்த நபருக்கு ஓட்டுப் போடுவது ஜெயலலிதாவின் நினைவுக்குச் செய்யும் துரோகம். என் வீட்டு நாய்களை கடிக்க விட்டுவிடுவார்கள் என்றெல்லாம் அவர் பொய்களைக் கூறுகிறார்; ஆதரவற்ற நாய்களைக் குழந்தைகளாக வளர்க்கிறேன், அவை யாரையும் கடித்ததில்லை.

நேற்று வந்து நாளை போகக்கூடிய இந்த நபருக்கு வாக்களிக்காதீர்கள். தெளிவோடு இருப்போம்' என பேசினார் .



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்