02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பாகிஸ்தானில் பயங்கரம்... துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
BY NEWS TODAY
12 Feb 2026
0
பகிர்

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நான்கு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.



பாகிஸ்தானில் உள்ள  கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு நான்கு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் மேமன் கோத் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பெண் காயமடைந்தார். அந்த பெண்ணை தனியார் வீட்டு வசதி சங்கத்திற்கு அருகில் உள்ள புதரில் இருந்து  மீட்ட போலீஸார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள், காலி மதுபாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். அந்த பெண் தப்பியோடுவதற்கு முன்பு அடையாளம் தெரியாத 2 ஆண்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.



ஹுசைஃபா என்ற இளைஞர்  கொள்ளையை எதிர்த்தபோது வயிற்றில் சுடப்பட்ட பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதே போன்று கராச்சியில் உள்ள  டெல்லி காலனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக ஸ்வாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இறந்தவர் வழக்கறிஞர் அத்தாவுல்லா ஜான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த  சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்