ஈரான் பேரழிவை சந்திக்கும்- அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
BY NEWS TODAY
14 Feb 2026
0
பகிர்

அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

மத்திய கிழக்கு நாடான ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளன. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரானில் நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கலாம் என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த நிலையில், ஈரானில் போராடுபவர்கள் மீது கடுமையாக அடக்குமுறைகளை ஏவி விடப்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். தற்போது மீண்டும் அவர் ஈரானை எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பிறகு அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறுகையில்,, ‛‛ஈரான் எங்களுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் ஓர் ஒப்பந்தம் மிக அவசியம் தேவையாக உள்ளது. இல்லாவிட்டால் கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும். இது ஈரானுக்கு மிகவும் வேதனையை அளிக்கும். அத்தகைய சம்பவத்தை செய்யநான் விரும்பவில்லை. அவர்கள் ஒப்பந்தம் செய்ய மறுத்தால் நிலைமை முற்றிலுமாக மாறிவிடும். 47 ஆண்டுகளாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதுவரை எந்த ஒப்பந்தமும் போடவில்லை. விரைவில் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்ப இருக்கிறோம்" என்றார்.
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்