02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
இனி 6-ம் வகுப்பில் இருந்து லேப் டாப்- புதுச்சேரி முதல்வரின் அசத்தல் அறிவிப்பு
BY NEWS TODAY
14 Feb 2026
0
பகிர்

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர். 

இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில்," பள்ளி கல்வி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் அவசியம். அதற்காக காலிப்பணியிடங்களை அரசு நிரப்பி வருகிறது. ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலையை புதுச்சேரி அரசு உருவாக்கி அதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு 37 பேர் மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றனர். இது மட்டுமின்றி பொறியியல், செவிலியர் கல்லூரி என அனைத்து கல்லூரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம். தற்போது மாணவர்கள் புதிய தொழிற்நுட்பம் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் 6-ம் வகுப்பில் இருந்து லேப்டாப் கொடுத்தால் எளிதாக இருக்கும் என என்னிடம் கேட்டனர். எனவே, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்றார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்