02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
நான்காம் தமிழ்ச் சங்கம் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது
BY NEWS TODAY
22 Feb 2026
0
பகிர்


மதுரை செந்தமிழ் கல்லூரியில் நான்காம் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.  விழாவுக்கு நான்காம் தமிழ் சங்க செயலாளர் மாரியப்ப முரளி தலைமை தாங்கினார். செந்தமிழ் கல்லூரி செயலாளர் தசரத ராமன் முன்னிலை வகித்தார். அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயர் ஆய்வு மைய உதவி பேராசிரியர் ஹரி பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'உப்பும், கூலமும், கூழாங்கல்லும்' இன்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

 முன்னதாக விழாவையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தாய்மொழி நாள் விழாவை யொட்டி நடந்த போட்டிகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனர். 

 விழாவில் துணை முதல்வர் சுப்புலட்சுமி, தமிழ் துறை தலைவர் பூங்கோதை, விரிவுரையாளர் அதிவீரபாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்