02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ரோட்டரி சங்கங்களின் சார்பில்
BY NEWS TODAY
15 Feb 2026
0
பகிர்

மதுரை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தமிழக வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.

 மூர்த்தி, சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் எம் முருகானந்தம், ரோட்டரி மாவட்டம் 3000ன் கவர்னர் ஜே. கார்த்திக்., 

 சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தலைவர் மொட்டைய சாமி, துணைத் தலைவர் சிவக்குமார், செயலாளர் செந்தில் ஆகியோர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் தேசியக்கொடி மற்றும் ரோட்டரி சங்க கொடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கொடி ஆகியவற்றை ஏற்றினர். இதையடுத்து அமைச்சர் மூர்த்தி எம்எல்ஏ வெங்கடேசன் அனைத்து உள்ள ரோட்டரி சங்க இயக்குனர் முருகானந்தம் ரோட்டரி 3000 கவர்னர் கார்த்திக் மற்றும் நிகழ்ச்சி தலைவர் செயலாளர் ஒருங்கிணைப்பாளர்கள் துணைத் தலைவர் மற்றும் அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். இதையடுத்து அமைச்சர் மூர்த்தி கொடியாசைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

 இந்நிகழ்ச்சியில் 800 காளைகள் அவிழ்க்கப்பட்டது. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 

 இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குலமங்கலம் வக்கீல் திருப்பதி என்பவரின் காளை முதல் பரிசை வென்றது. 

 முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு காங்கேயம் பசு மாடு மற்றும் கன்று பரிசாக வழங்கப்பட்டது.

 சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கேடிஎம் பைக் பரிசாக வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 22 பேர் காயம் அடைந்தனர். இதில் மூன்று பேர் மட்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், சுரேஷ் பாண்டியன், கதிரவன், தாஸ்குமார், வக்கீல் மனோகரன், குமரப்பன் மற்றும் மதுரை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் பிரவீன் குமார், அல் காசிம், செயலாளர் பிரசன்னா, பொருளாளர் ரம்யா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்