02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கேரளாவில் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராவார்- காங்கிரஸ் தலைவர் பேச்சால் பரபரப்பு
BY NEWS TODAY
16 Feb 2026
0
பகிர்

கேரளாவில் மீண்டும் முதலமைச்சராக பினராயி விஜயன் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் மாநில திட்டமிடல் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டார். அப்போது அவர் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான கேரளா அரசை வெகுவாக பாராட்டியதுடன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். 

இந்த விழாவில் மணிசங்கர் அய்யர் பேசுகையில், பினராயி விஜயன் தலைமையிலான கேரளா மாநில அரசின் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நாட்டுக்கே தலைமையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையை வேறு எந்த மாநிலத்தையும்விட கேரளம் திறம்பட நிறைவேற்றி வருகிறது. நடைமுறைச் செயலாக்கத்தில் கேரளா முதலிடத்தில் இருந்தாலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது. 

பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை ஆதரிப்பதில் காங்கிரஸ் கைவிட்ட பொறுப்பை முதல்வர் ஏற்க வேண்டும். ஏழைகளுக்கான தேசம், வளர்ச்சியில் தீர்க்கமான குரலைக் கொண்டு மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கிய ஒரே மாநிலம் மார்க்சிஸ்ட் ஆட்சியின் கீழ் இருக்கும் கேரளா தான்” என்றார். கேரளாவில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் புகழ்மாலை சூட்டியிருப்பது அந்த கட்சியினரிடையே பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்