அச்சம் இல்லை, அச்சம் இல்லை... பாரதி பாடலை பதிவிட்ட மாணிக்கம் தாகூர் எம்.பி
BY NEWS TODAY
17 Feb 2026
0
பகிர்

'அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே' என்ற பாரதியாரின் வரிகளை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு பேசுகையில், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று பேசினார்.

அவரின் இந்த பேச்சு திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. மாணிக்கம் தாகூர் குறித்து கட்சி தலைமையிடம் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே' என்ற பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்