02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மாபெரும் காது குத்தும் விழா'- பட்ஜெட் கூட்டத்தை பதறவைத்த அதிமுக எம்எல்ஏக்கள்!
BY NEWS TODAY
17 Feb 2026
0
பகிர்

பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்ற விமர்சனம் செய்து அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் சட்டமன்றத் தோ்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. 

இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று அதிமுக உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், சட்டப்பேரவைக்கு வருகைதந்த அதிமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த அழைப்பிதழில், “மாபெரும் காது குத்தும் விழா, கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது” என்று அச்சசிடப்பட்டிருந்தது.

மேலும், சட்டப்பேரவையில் நடைபெறும் இவ்விழாவிற்கு தலைமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னின்று காது குத்துபவர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. அத்துடன் பின்குறிப்பு என்ற பெயரில் சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல முறைகளில் மொய் வைக்கலாம் என்றும் அதிமுகவினர் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்