02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்- தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்
BY NEWS TODAY
18 Feb 2026
0
பகிர்

தமிழ்நாட்டில் மார்ச் 16-ம் தேதி மாநிலங்களாவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களின் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களின் தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

திமுகவில் 4 இடங்களும், அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பிப்ரவரி 26-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 5-ம் தேதி வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்