02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
BY NEWS TODAY
20 Feb 2026
0
பகிர்

திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். 

திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்" என்றார். அப்போது அவரிடம் திமுகவில் இணைவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு"பொறுத்திருந்து பாருங்கள்" என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில், அவரும் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்