02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக செயலாளருக்கு கத்திக்குத்து- வேடசந்தூரில் பரபரப்பு
BY NEWS TODAY
21 Feb 2026
0
பகிர்

சால்வை அணிவிப்பது போல திமுக ஒன்றிய செயலாளரின் கழுத்தில் கத்தியால் இளைஞர் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன். தொழிலதிபரான இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர். இவருக்கு சால்வை அணிக்க ஒரு இளைஞர் வந்தார். அவர் வீரா சாமிநாதனுக்கு சால்வை அணிவிப்பது போல அதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தினார். இதை தடுக்க முயன்ற வீரா சாமிநாதனின் ஆதரவாளர் நாச்சிமுத்துவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவரும் காயமடைந்தார். 

கழுத்தில் கத்துக்குத்து விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரா சாமிநாதனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். எதற்காக அவர் திமுக செயலாளர் வீரா சாமிநாதனை கொலை செய்ய முயன்றார் என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக செயலாளரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்