02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மாநில தேர்தல் ஆணையர்களுக்கான மாநாடு -. நாளை நடைபெறுகிறது
BY NEWS TODAY
23 Feb 2026
0
பகிர்

மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நாளை நடைபெறுகிறது. 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் , அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளும் மாநிலத் தேர்தலுகாக தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்க மாநில தேர்தல் ஆணையர்களின் முக்கியமான மாநாடு நாளை ( பிப்ரவரி 24) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.  

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், தேர்தல் தொடர்பான சட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். உள்நாட்டுத் தேர்தல் நடைமுறைகளைச் சீரமைக்கும் நோக்கில் இந்தத் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான இத்தகைய மாநாடு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்