திமுக அரசின் அவலமும், ஸ்டாலின் சொத்து குவிப்பும் - வெளுத்து வாங்கிய மோடி
BY NEWS TODAY
12 Mar 2026
0
பகிர்

திமுக அரசின் அவலமும், ஸ்டாலின் சொத்து குவிப்பும் - வெளுத்து வாங்கிய மோடி

 திருச்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில்



 திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி திமுக ஆட்சி கொள்ளை அடிக்கிறது என்றும் அது ஒரே குடும்பத்திற்கு போய் சேருகிறது என்று பேசினார்.

 அந்தப் பேச்சு கூடியிருந்த கூட்டத்தில் உற்சாகத்தை தூண்டியது.

 திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரே குடும்பத்தில் துவங்கி ஒரே குடும்பத்தில் முடிந்து விடுகிறது என்று பேசினார்.

 அதாவது கட்சி அதிகாரம் மட்டுமல்ல ஆட்சி அதிகாரம், ஊழல் அதிகாரம் அனைத்தும் ஸ்டாலின் குடும்பத்திடமே உள்ளது போன்று பேசியுள்ளார்.

 திமுக விஞ்ஞான ஊழலுக்கு பெயர் பெற்றது இந்த மாடல் ஸ்டாலின் குடும்பத்தின் ஏடிஎம் ஆக மாறி உள்ளது என்றார்.

 இதன் மூலம் கட்சியில் ஸ்டாலின் குடும்ப மட்டுமே சம்பாதிக்கிறது என்றும் கட்சியினரை வளர விட வில்லை என்பதையும் மறைமுகமாக பிரதமர் சாடியுள்ளார்.

 அதுமட்டுமல்லாமல் வேலை வாங்கித் தருவதாக பலநூறு கோடி மோசடி செய்து உள்ள அமைச்சர் நேருவையும் பிரதமர் விட்டு வைக்கவில்லை.

 இதன் மூலம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்களையும் குடும்பத்தினரையும் பிரதமர் சீண்டி விட்டுள்ளார்.

 ஆற்றில் மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது இதற்கு திமுக துணை போகிறது என்றும் பிரதமர் குற்றச்சாட்டியுள்ளார். 

 தமிழக மக்களால் மறந்து போன இன்ஜினியரிங் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதையும் திமுக அதற்கு துணை போன அதிகம் பிரதமர் ஞாபகப்படுத்தியுள்ளார்.

அதே சமயம் வரும் சட்டசபை தேர்தலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியலா அல்லது வளர்ச்சி அரசியலா என்ற இரு போட்டியே இருக்கும். மக்கள் வளர்ச்சி அரசியலையே தேர்வு செய்வார்கள் என்று பேசினார்.

 ஒட்டுமொத்தமாக திமுகவை வசை பாடிய மோடியின் இந்த பேச்சு வருகிற தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்