பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெட்டி கொலை.
BY NEWS TODAY
12 Mar 2026
0
பகிர்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெட்டி கொலை.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர். 

 அதிமுக, திமுக, பாஜக, தவெக, அமமுக கண்டனம்.


எடப்பாடி பழனிசாமி.

மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் வன்கொடுமையும் பெண்களுக்கான பாதுகாப்பின்மையும் தினச் செய்தியாகி விட்டது.

சிறுமியை காணவில்லை என உறவினர்கள் புகாரளித்தும் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்களுடன் திமுக எம்எல்ஏ ஏன் சமாதானம் பேச வேண்டும்?

எதையாவது மறைக்க, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய, குற்றவாளிகளை காப்பாற்றவே திமுக முயல்கிறதா?

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பாஜக அண்ணாமலை: இந்த கொடூரமான படுகொலைச் செய்தியைக் கேட்கும்போது சொல்லொண்ணா வேதனையாக உள்ளது. ஊழல் நிறைந்த மற்றும் திறமையற்ற இந்த தி.மு.க ஆட்சியில், நமது பெண் குழந்தைகளும், சகோதரிகளும் தினசரி இத்தகைய வன்முறைகளை எதிர்கொள்வது மிகுந்த மனவலியைத் தருகிறது.

 டிடிவி தினகரன்:

இச்சம்பவத்தை நினைத்துப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது. அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் தமிழகத்தை பொதுமக்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைத் தானே தமிழகத்தின் அப்பா என தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.

 திமுக எம்.பி. கனிமொழி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்.

தவெக ஆதவ் அர்ஜூனா:

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. திறனற்ற தி.மு.க. ஆட்சியின் கையாலாகாதனத்தால் இன்னும் எத்தனை மகள்கள் பாதிக்கப்படப் போகிறார்கள்? தி.மு.க அரசுக்கு மக்கள் மீதோ, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தோ துளியும் கவலை இல்லை.

 




----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்