தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு!!
BY NEWS TODAY
15 Mar 2026
0
பகிர்

தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு!!

தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு 


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகளை, தேர்தல் ஆணையம் வரும் 16 அல்லது 17ஆம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 3ஆவது வாரம் அல்லது 4ஆவது வாரத்தில் தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறலாம்.


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அஸாமில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

 இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. அப்போது தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்