புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தமா?
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்

 புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ஜீவானந்தமா?

2006 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் 10 ஆயிரம் ஒட்டு பெற்றவர் 


தேசிய ஜனநாயக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிடும் பாஜக விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது. இந்த தொகுதிகளில் மிக முக்கியமாக கருதும் திருச்செந்தூர், ராமநாதபுரம், நாகர்கோவில், மதுரை தெற்கு, சாத்தூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்பதில் பாஜக உறுதியுடன் இருக்கிறது. அதனால், வெற்றி பெற வாய்ப்புள்ள, தொகுதியில் செல்வாக்குள்ள நபர்களை மட்டுமே வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது. 


அதனடிப்படையில், மாநிலத் தலைவர் நாயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 மதுரை தெற்கு தொகுதியில் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார்.

 இந்த முறை யாரும் எதிர்பார்க்காத நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பாஜகவுக்கு மூன்று தொகுதிகள் கிடைத்துள்ளது.

 புதுக்கோட்டை தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த தொகுதியில் செல்வாக்கு மிக்க ஒருவரை வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மும்பை வடாலா தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் தமிழ்ச்செல்வன் என்பவரது சகோதரரும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான

 ஆர்.ஜீவானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கடந்த 2006 தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜீவானந்தம் செல்வாக்குள்ள நபராகவும், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவராகவும் இருப்பதால், அவர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டால் திமுக உள்ளிட்ட எந்த கட்சி வேட்பாளர் எதிர்த்துப் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், ஜீவானந்தத்திற்கு இந்த முறை புதுக்கோட்டை தொகுதியில் வாய்ப்பு கொடுத்து, அவரை வெற்றி பெற வைக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறன.


பாஜக செயற்குழு உறுப்பினராகவும், வழக்கறிஞராகவும் இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்.ஜீவானந்தம் மக்கள் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். எனவே ஜீவானந்தத்தை வேட்பாளராக களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


 


 


 


 


 



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்