18
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஆர்.பி.உதயகுமார் கார், வீடுகளில் குறிவைத்து தொடரும் சோதனை
BY NEWS TODAY
28 Mar 2026
0
பகிர்

 ஆர்.பி.உதயகுமார் கார், வீடுகளில் குறிவைத்து தொடரும் சோதனை 


 தொடர்ந்து ஏமாறும் பறக்கும் படையினர்



 மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் அவரது அலுவலகம் செயல்படுகிறது.

 இதற்காக தினமும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அங்கு செல்வது வழக்கம். இன்று வழக்கம் போல் அங்கு சென்று கொண்டிருந்தபோது ஆலங்குளம் பைபாஸ் சாலையில் பறக்கும் படையினர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.


 அவருடன் பயணித்த மற்ற கார்களையும் சோதனை செய்தனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை செய்தனர்.


ஏற்கனவே கடந்த வாரம் ஐந்து முறை திருமங்கலம் தொகுதியில் உள்ள அம்மா கோவிலில் சோதனை செய்தபோது எந்த பரிசு பொருள் கிடைக்கவில்லை.


இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் தரப்பில் கூறியதாவது, 


ஆளுங்கட்சி தரப்பு தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தி தங்களை கைப்பாவையாக கொண்டு தொடர் சோதனை செய்து வருகிறார்கள். திமுக வாகனங்களில் சோதனைகள் செய்யவதில்லை . ஆர்.பி. உதயகுமார் இல்லங்களிலும் ,வாகனங்களிலும் பலமுறை சோதனை செய்தும் பணமோ, பரிசு பொருட்களோ எதையும் பறக்கும் படையினர் கைப்பற்றவில்லை. நாங்கள் தேர்தல் விதிகளை பின்பற்றி

 தேர்தல் பணி ஆற்று வருகிறோம். ஆனால் ஆளுங்கட்சி தோல்வி பயத்தால் இதுபோன்று அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்