முதல்வர் ஸ்டாலின் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரப் பயண விவரம்
BY NEWS TODAY
02 Apr 2026
0
பகிர்

 மு.க. ஸ்டாலின் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரப் பயண விவரம்


 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மார்ச் 31-ஆம் தேதி தொடங்கிய பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டப் பிரச்சாரப் பயணத்தை ஏப்ரல் 3-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறார்.

​திமுக கூட்டணியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களின் 

​பிரச்சாரப் பயண அட்டவணை

 திமுக தலைமைக் கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி ஏப்ரல் மூணாம் தேதி மாலை 5 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் தொகுதி

 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

 மறுநாள் நாலாம் தேதி காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறும் பொது கூட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிளியூர் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

 அதே நாள் மாலை 5 மணிக்கு சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

 ஏப்ரல் 5-ம் தேதி காலை விருதுநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

 மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய மற்றும் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்