சொந்த கட்சி வேட்பாளரை மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்த காங்கிரஸ் கட்சியினர்:
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

சொந்த கட்சி வேட்பாளரை மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்த காங்கிரஸ் கட்சியினர்:


மதுரை மேலூர் தொகுதியில் சலசலப்பு:


நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் தகுதிக்கு மதுரை மேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 மேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

 வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மேலூருக்கு வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி மனித உரிமை பிரிவு தலைவராக உள்ள மகாத்மா ஸ்ரீனிவாசன், வைரவன் ராமசுந்தரம் ஆகியோர் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் அவரை முற்றுகையிட்டு திரும்பிச் செல்லுமாறு வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு விஸ்வநாதன் தாக்கல் செய்தார். 

 அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாத்மா சீனிவாசன் வைரவன் ராமசுந்தரம் உட்பட நான்கு பேர் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்