அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் மதுரைக்கு மட்டும் 8000 கோடி திட்டங்களை செய்துள்ளோம்
BY NEWS TODAY
07 Apr 2026
0
பகிர்

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரைக்கு மட்டும் 8000 கோடி அளவில் திட்டங்களை செய்துள்ளோம் 


மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணன் பிரச்சாரம் 


மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணன் கணபதி சேர்வைதெரு, பர்மா காலனி ,வ.உ.சி. தெரு, காந்திபுரம், லூர்து நகர் ,மாதா கோவில் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார்‌ இந்த பிரச்சாரத்தில் முத்துலட்சுமி சத்யா, சுரேஷ் ,சரவணன் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, பகுதி செயலாளர் கே வி கே கண்ணன், வட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், வெங்கடேஷ் உட்பட பல பங்கேற்றனர்


வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் பேசியதாவது,


மதுரை மாவட்டத்தில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 8000 கோடி ரூபாய் அளவில் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம்.


 குறிப்பாக திமுகவில் சீரழிக்கப்பட்ட மதுரை மாநாட்சியை மேம்படுத்த 250 கோடி சிறப்பு நிதி, மதுரை மாவட்டத்தில் 12 அம்மா உணவகம்,

1000 கோடியில் ஸ்மார்ட் திட்டம், 1000 கோடியில் பறக்கும் பாலம், 1292 கோடியில் குடிநீர் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 223 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு இதற்காக 21 கோடி செலவில் சுற்றுச்சுவர் மற்றும் பல்வேறு திட்டங்களுக்குநிதி ஒதுக்கப்பட்டது.

 வடக்கு தொகுதி மட்டும் 37.25 கோடி மதிப்பீட்டில் உலகத் தமிழ் சங்க பெரும்திட்ட வளாகம் ,

ஆறு கோடியில் செயற்கை இழை ஹாக்கி மைதானம், மதுரை மாட்டுத்தாவணி அருகே 9 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் ,மதுரை மாட்டுத்தாவணி அருகே 12 கோடியில் பழச்சந்தை, 30 கோடியில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், மதுரை வடக்கு தொகுதியில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் 84 கோடியில் தடுப்பணைகள், 150 கோடியில் அரசு ராஜாஜி மருத்துவமனைமல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என பல திட்டங்கள் செயல்படுத்தினோம். 

தற்போது திமுக ஆட்சியில் 5000கோடி அளவில் மதுரையில் திட்டங்கள் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகமும் , ஜல்லிக்கட்டு அரங்கமும்தான் திமுக செய்தது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் ரிப்பன் வெட்டி திறந்து அதற்கு ஸ்டிக்கர் போடுகிறார்கள். எடப்பாடியார்முதலமைச்சராக வருவார். அப்போது வடக்கு தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக உருவாக்கி காட்டுவேன் என பேசினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்