தேர்தல் அறிக்கைகளை கண்காட்சி மூலம் காட்டி ஓட்டு கேட்பு
BY NEWS TODAY
08 Apr 2026
0
பகிர்

தேர்தல் அறிக்கைகளை கண்காட்சி மூலம் காட்டி ஓட்டு கேட்பு 

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 


2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

 இதனை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக பெரிய ட்ரெய்லர் வாகனத்தில் தத்துரூபமாக அதை காட்சிப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா. குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபாய், விலையில்லா குளிர்சாதன பெட்டி, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளிட்ட தேர்தல் அறிக்கைகள தத்ரூபமாக காட்சிப்படுத்தி உள்ளனர். நடமாடும் வாகனம் மூலம் நவீன முறையில் படங்களைக் கொண்ட கண்காட்சி மூலம் வீதி, வீதியாக சென்று ராஜன் செல்லப்பா பிரச்சாரம் செய்தார்.

 இது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

இந்த பிரச்சாரத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், அமமுக டேவிட் அண்ணாதுரை, தமாக கே எஸ் கே ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்