16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அமைச்சர் மூர்த்தியை குற்றம் சாட்டி வாக்கு கேட்ட தவெக வேட்பாளர்.
BY NEWS TODAY
09 Apr 2026
0
பகிர்

அமைச்சர் மூர்த்தியை குற்றம் சாட்டி வாக்கு கேட்ட தவெக வேட்பாளர்.

மதுரை கிழக்குத் தொகுதியில்


 மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் மூர்த்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இதுவரை யாரும் மனு தாக்கல் செய்வதில்லை. குறிப்பாக கட்சியில் தனக்கு சீட்டு ஒதுக்கும்படி யாரும் விருப்பம் மனுவும் கொடுத்ததில்லை.

 இந்நிலையில் அதே கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.

 அவர் நாராயணபுரம், பார்க் டவுன் பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

 அப்போது அவர் பொது மக்களிடம் பேசுகையில், தொகுதியில் அதிகாரமும் பணபலமும் படைத்தவராக திமுக வேட்பாளர் திகழ்கிறார். அவரை எதிர்த்து கட்சியில் ஒருவர் கூட விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. திமுகவில் நான் இருந்தபோது என்னை வளர விடாமல் தடுத்தவர். இப்போது அவரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். அவர் அதிகார திமிரில் கட்சிக்காரர்களையும், பொதுமக்களையும்  மதிக்காமல் நடத்துவது மக்களுக்கு தெரியும். நான் வெற்றி பெற்றால் நானே தேடி வந்து உங்கள் குறைகளை கேட்டு திட்டங்களை செயல்படுத்துவேன்.  எனக்கு விசில் சன்னத்தில் வாக்களிக்கவும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்