16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக கொடி எரித்து தலைமைக் காவலர் போராட்டம்
BY NEWS TODAY
09 Apr 2026
0
பகிர்

திமுக கொடி எரித்து தலைமைக் காவலர் போராட்டம்

 தவறான சிகிச்சைக்காக நீதி கேட்டு தலைமைச் செயலகம் முன்பு


சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, நீதி கோரி தலைமை காவலர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டபாணி. சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு அவரது மகளுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்ட நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.


அப்போது மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் கால் பாதம் அகற்றப்பட்டதாக 

குற்றம் சாட்டி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோதண்டபாணி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


இந்நிலையில், தனது மகளுக்கு நீதி கோரி, காவலர் சீருடையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த கோதண்டபாணி, தனது மற்றொரு மகளுடன் சேர்ந்து திமுக கொடியை எரித்து, திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

 தலைமைச் செயலக வாயிலில் காவலுக்கு இருந்த போலீசார் தீயை அணைத்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்