16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுகவில் இணைக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள்
BY NEWS TODAY
09 Apr 2026
0
பகிர்

திமுகவில் மீண்டும் இணைக்கப்பட்ட அழகிரியின் ஆதரவாளர்கள்.


மதுரை
மதுரை வடக்கு தேர்தல் காரியாலய அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை மாநகர் திமுக செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் முன்னிலையில் திமுக முன்னாள் மதுரை மாநகர் துணைச் செயலாளர் எம்.உதயகுமார், புறநகர் மாவட்ட துணை செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எம் எல் ராஜ் , பகுதிசெயலாளர்கள் கோபிநாதன், முபாரக் மந்திரி, முருகன், முன்னாள் பகுதி இளைஞரணி செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் மீண்டும் திமுகவில் இணைந்தனர்.

 அவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி திமுக கரை வேஷ்டி கொடுத்து வரவேற்றார்.
 அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த மன்னன் அதிமுகவில் இணைந்த பிறகு அழகிரியின்  ஆதரவாளர்கள் மீண்டும் திமுகவில் இணைக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

மேலும் 14வது வார்டு முன்னாள் அதிமுக வட்ட செயலாளர் விஜயகுமார், மச்சக்காளை , தற்போதைய அதிமுக 10வது வட்டச் செயலாளர் கே எம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்