16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கடந்த காலங்களில் 234 தொகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக கம்பம் உள்ளது
BY NEWS TODAY
13 Apr 2026
0
பகிர்

கடந்த காலங்களில் 234 தொகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக கம்பம் உள்ளது

தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு.


மு.பழனிவேல்ராஜன்-தேனிNEWS TODAY TAMIL தேனி:ஏப்.13.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தின் முக்கிய தொகுதியான கம்பத்தில் திமுக சார்பில் அனுபவம் வாய்ந்த கம்பம் ராமகிருஷ்ணனும், அதிமுக சார்பில் எஸ்.டி.கே. ஜக்கையனும் களத்தில் உள்ள நிலையில், தவெக-வின் ஜெகநாத் மிஸ்ரா அளிக்கும் போட்டி இத்தொகுதியில் மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது. தனது சின்னமான 'விசில்' (Whistle) சின்னத்திற்கு அவர் ஆதரவு கோரி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கம்பம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் PLA. ஜெகநாத் மிஸ்ரா தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஜெகநாத் மிஸ்ரா கடந்த சில நாட்களாக உத்தமபாளையம், சின்னமனூர், கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலைபட்டி மற்றும் கம்பம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களைக் கவரும் வகையில் 'புதிய அரசியல் மாற்றம்' என்ற முழக்கத்துடன் அவர் வாக்கு கேட்டு வருகிறார்.

தனது பிரச்சாரத்தின் போது தொகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அவர் பேசி வருகிறார்: இதுகுறித்து தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா நம்மிடம் கூறுகையில்., "கம்பம் தொகுதியில் மாணவர்களின் நலன் கருதி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படும்.முதலில் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் அத்தியாவசிய வசதிகள் மற்றும் தொகுதி வளர்ச்சி வசதி திட்டங்களை செய்து முடிப்பேன்.

கம்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் குப்பை மேலாண்மை மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளை நிரந்தரமாகச் சரி செய்தல்.இப்பகுதி விவசாயிகளின் நலன் காக்க குளிரூட்டப்பட்ட கிடங்குகள் மற்றும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தல் போன்றவை செய்து முடிப்பேன்.

கடந்த காலங்களில் 234 தொகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக கம்பம் உள்ளது. புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக உள்ள கம்பம் சட்டமன்றத் தொகுதியை தமிழகத்தின் முன்னோடி வளர்ச்சி தொகுதியான மாற்றுவேன்" என்றார்.

பிரச்சாரத்தின் போது அவருக்குப் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நடிகர் பொன்னம்பலம் உள்ளிட்டோர் இவருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொண்டர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் என்பதால், கம்பம் தொகுதியில் ஜெகநாத் மிஸ்ரா காட்டும் வேகம் மற்ற கட்சியினரிடையே உற்று நோக்கப்படுகி

றது.








----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்