02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ராகுல் காந்திக்கு எதிராக இன்று உரிமை மீறல் நோட்டீஸ்
BY NEWS TODAY
12 Feb 2026
0
பகிர்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக  உரிமை மீறல் நோட்டீஸ் இன்று அனுப்ப பாஜக தீர்மானம் கொண்டு வர உள்ளது.



மத்திய பட்ஜெட் குறித்து மக்களவையில்  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “நாட்டை பிரதமர் மோடி விற்பனை செய்துவிட்டார்” என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.



இந்நிலையில், மக்களவையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைமுறை மற்றும் செயல்பாட்டு நடத்தை குறித்து மிகவும் தெளிவான விதிகள் உள்ளன. ஓர் உறுப்பினருக்கு எதிராக மற்றோர் உறுப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்பினால், அறிவிப்பினை நீங்கள் வழங்க வேண்டும். மேலும், குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வேண்டும். ராகுல் காந்தி முன்வைத்த கருத்துகளை உறுதிப்படுத்த, அவரை அவைக்கு வரவழைக்குமாறு கோரியுள்ளேன்" என்றார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பும் தீர்மானத்தை பாஜக இன்று (பிப்ரவரி 12)  கொண்டு வருகிறது. 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்