02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
புல்வாமா நினைவு தினம்- பிரதமர் மோடி நினைவஞ்சலி!
BY NEWS TODAY
14 Feb 2026
0
பகிர்

புல்வாமாவில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு இன்று (பிப்ரவரி 14) கடைபிடிக்கப்படுகிறது. இதே நாளில் ஜம்மு காஷ்மீர் பகுதியான ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளர்ர. அதில், " கடந்த 2019-ம் ஆண்டு , இதே நாளில் புல்வாமாவில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். 

அவர்களது தேசத்திற்கான சேவை நம் உணர்வின் என்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியரும் அவர்களின் துணிச்சலைக் கண்டு உத்வேகம் பெறுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்