02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஜார்க்கண்ட்டில் பயங்கரம்... விமான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
BY NEWS TODAY
24 Feb 2026
0
பகிர்

ஜார்க்கண்டில் நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து ஏற்பட்ட இடம், அடர்ந்த காட்டுப்பகுதியாகும். இதனால் மீட்பு நடவடிக்கையில் சிரமம் ஏற்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 7 பேரின் உடல்களும் இன்று (பிப்ரவரி 24) மீட்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட்டில் இருந்து அவசர சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளியும், அவருக்கு உதவச் சென்ற மருத்துவக் குழுவினரும் விமான விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்