02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கலப்பட பால் குடித்ததால் பயங்கரம்- ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு
BY NEWS TODAY
24 Feb 2026
0
பகிர்

ஆந்திராவில் கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திர பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பால் வியாபாரி ஒருவரிடம் பால் வாங்கி குடித்தவர்கள் திடீரென மயங்கி விழ ஆரம்பித்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 போ் உடல்நிலை பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடர்பாக தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

கிழக்கு கோதாவரியை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் தான் உயிரிழந்த 4 பேரும் பால் வாங்கியுள்ளனர். அந்த வியாபாரி, உள்ளூா் கால்நடை விவசாயிகளிடமிருந்தும் பால் கொள்முதல் செய்து வீடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளாா். இதையடுத்து பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா். இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் செலவை அரசு ஏற்கும் என்றும் தெரிவித்தாா்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். கலப்பட பால் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்