02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்ல கண்ணு காலமானார்
BY NEWS TODAY
25 Feb 2026
0
பகிர்


 சுதந்திரப் போராட்ட வீரரும் வ.கம்யூ. கட்சியின் மூத்த தலைவருமான நல்ல கண்ணு காலமானார்.


 அரசியலில் கை சுத்தம் என்று புகழப்படும் சுதந்திரப் போராட்ட வீரரும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) கடந்த 20 நாட்களாக உடல் நலம் குன்றி சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் உறுப்புகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. 

 இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அவரது ஆன்மா பிரிந்தது.

 அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு தகைசால் விருது பெற்ற தோழர் நல்ல கண்ணு உடலுக்கு அரசு மரியாதை  செய்யப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளார்.

  அவரது உடல் கல்விக்காக தானம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் நாளை மாலை 5 மணிக்கு  ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்.

 பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 சென்னையில் உள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.




----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்