ஹேண்ட் பேக்' வீடு தோறும் பெண்களுக்கு வழங்கல்
BY NEWS TODAY
12 Mar 2026
0
பகிர்

'ஹேண்ட் பேக்' வீடு தோறும் பெண்களுக்கு வழங்கல்


 தேர்தலை மையப்படுத்தி களத்தில் இறங்கிய டாக்டர் சரவணன்


மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரும்பாலையில் நேற்று 11/3/2026 அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் அனைத்து வீடுகளுக்கும் சென்று இல்லத்தரசிகள்‌ அனைவருக்கும் ஹேண்ட் பேக்குகள் பரிசு வழங்கினர் .

 மேலும் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் ஆகியவை சார்பில் கரும்பாலை சமுதாய கூடத்தில் நடத்தப்பட்ட இலவச பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்து, முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்ற பொதுமக்களுக்கு விலையின்றி மருந்து மாத்திரைகளையும் வழங்கினார். 

மேலும் பகுதி மக்களுக்கு சுமார் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி உணவு வழங்கினார்.

முன்னதாக அப்பகுதியில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றதோடு, கரும்பாலையின் அனைத்து வீதிகளுக்கும் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், அடுத்து அமைய உள்ள அதிமுக ஆட்சியில் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவுவதாகவும் டாக்டர் பா.சரவணன் தெரிவித்தார்.

 வரும் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிடுவதற்கு முயற்சி செய்து வருகிறார் இதனை கருத்தில் கொண்டு ஹேண்ட் பேக் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்