தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க அதிமுக எம்பி மனு.
BY NEWS TODAY
12 Mar 2026
0
பகிர்

தமிழகத்தில் தொடரும் பலாத்கார கொலைகள்.

 தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க அதிமுக எம்பி மனு.


 நிரந்தர டிஜிபி நியமிக்க வலியுறுத்தல்


தூத்துக்குடி, மதுராந்தகம் கிருஷ்ணகிரி என்று தொடரும் பாலியல் கொடுமை! தமிழகத்தில் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் முற்றிலும் பாதுகாப்பு அற்ற நிலை! 

உடனடியாக விசாரணை நடத்த கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக சார்பில் இன்பதுரை எம்பி அவசர புகார்!

 தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்முறை கொலைகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை வெளியிட வேண்டும். அதற்காக உடனடியாக உயர்மட்ட குழு நியமித்து உண்மை கண்டறிய வேண்டும் என்று டெல்லியில் தேசிய மகளிர் அணி தலைவி விஜய கிஷோர் ரகத்கரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

 மனைவி தமிழகத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பலாத்கார சம்பவங்களும் கொலைகளும் அரங்கேறி வருகிறது. போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

 இது போன்ற பிரச்சனைகளை கையாளாமல் உள்ள பொறுப்பு டிஜிபியை நீக்கி உடனடியாக நிரந்தர டிஜிபி நியமிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் அதிமுக எம்பி இன்பத் துரை குறிப்பிட்டுள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்